Header Ads

Header ADS

மத்திய அரசு பணி.. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

டெல்லி: மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தில் மாதம் சம்பளம் ரூ.30 ஆயிரம் ரூ.1.80 லட்சம் வரையிலான சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்பு என்பது முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் வருமாறு: 

பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்  உதவி அலுவலர் பணிக்கு 4 பேர், துணை அலுவலர் பணிக்கு 2 பேர்,  வெவ்வேறு உதவி மேலாளர் பணிக்கு 16 பேர் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உதவி அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரிகளில் HR/Admin பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

துணை அலுவலர் பணிக்கு சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு பிஇ/பிடெக் கம்யூட்டர் சயின்ஸ்/ஐடி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்சிஏ/பிஜிடிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உதவி அலுவலர் பணிக்கான விண்ணப்பத்தாரர்கள் 34 வயதுக்குள்ளும், துணை அலுவலர் பணிக்கு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதில் உதவி அலுவலர் பணிக்கு மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரையும், துணை அலுவலர் பணிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையும், உதவி மேலாளர்  பணிக்கு  மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரையும் சம்பளம் கிடைக்கும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய அக்டோபர் 14ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களை அறிய விரும்புவோர் கீழ்கண்ட லிங்க் இணைப்புகளை கிளிக் செய்து பயன்பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

No comments

Powered by Blogger.