விழுந்தது தடை.. 138 சூதாட்ட செயலி, 94 கடன் செயலி என 232 ஆப்களுக்கு ஆப்பு.. மத்திய அரசு அதிரடி
சென்னை: இந்தியாவில் 138 சூதாட்ட செயலி மற்றும் 94 கடன் செயலி என மொத்தம் 232 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்து முடக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைககளை துவங்கி உள்ளது.
செல்போன் செயலிகள் மூலம் இந்தியர்களின் முக்கிய விபரங்கள் திருடப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து
வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக இந்த செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி அவசர நடவடிக்கையாக இது மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சில பரிந்துரைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு வழங்கி இருந்தது. அதனப்படையில் தான் தற்போது 232 செயலிகளை இந்தியாவில் தடை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கி உள்ளது.
இந்திய இறையாண்மையை மீறி செயல்பட்டதாக கூறி இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீனா தொடர்புடைய செயலிகளை தடை செய்வது ஒன்றும் புதியது அல்ல.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவிடம் சீனா எல்லையில் பிரச்சனை செய்தது. அ்ப்போது 2020
ஜூன் மாதம் டிக்டாக், எக்ஸ்சென்டர், சிஇன், கேம்ஸ்கேனர் உள்பட 59 சீன
செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சீனா செயலிகள் அவ்வப்போது தடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு
பிப்ரவரியில் 54 சீன செயலிகளுக்கம் தடை விதித்து இருந்தது. அந்த வரிசையில்
தான் தற்போது 232 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments