Header Ads

Header ADS

கசிந்தது! அண்ணாமலையின் அதிரடி ஆட்டத்துக்கான காரணம்! சூடச்சூட லீக் ஆனது பாஜ போட்ட பக்கா பிளான்! அதிமுகவின் அடுத்த மூவ் என்ன?

சென்னை, மார்ச் 26–

தனித்து தான் போட்டி என அண்ணாமலை அடம்பிடிப்பதற்கான காரணமும் அவரது தடாலடி பேச்சுக்கான காரணமும் இப்போது கசிந்துள்ளது.

அண்ணாமலை வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தனித்து நிற்கும் அளவுக்கு வளர்ந்து விட்டதா என்றால் இல்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஆனால் எப்படியாவது லோக்சபா தேர்தலில் தமிழக பாஜகவை தனித்துப் போட்டியிட வைக்க வேண்டும் என அண்ணாமலை ஆசைப்படுகிறார். முதலில் கட்சி கூட்டத்தில் தனது விருப்பத்தை சொன்னார். பிறகு ஓபனாகவே பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

இதற்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வந்தது. இப்போது அதிமுகவுடன் தான் கூட்டணி தொடர்கிறது. மாற்றம் தேவை என்றால் தேர்தலுக்கு முன்பு பார்லிமெட்ன்ட் குழு இறுதி முடிவு எடுக்கும் என எச்.ராஜா, வானதி போன்ற மூத்த தலைவர்கள் கூறினர்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார் அண்ணாமலை. அதன் பிறகு கொடுத்த பேட்டிகளில் அதிமுக, பாஜ கூட்டணியில் குழப்பம் இல்லை. கூட்டணி முடிவை டில்லி தலைமை எடுக்கும் என்றார்.

அடுத்த சில நாட்களில் தென்காசி பொதுக்கூட்டத்தில், பாஜக எனும் கிளி கூண்டை விட்டு வெளியே வந்து விட்டது. இப்போது சுதந்திரமாக பறக்க தயாராகிவிட்டது என பஞ்ச் டயலாக் பேசி மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தார்.

இவ்வளவு சொல்லியும் அண்ணாமலை தனது முடிவை மாற்றிக்கொள்ள வில்லையே என எச்.ராஜா, வானதி போன்ற தலைவர்கள் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம். பிரஸ்மீட்களில் கூட இது பற்றிய கேள்விகளை நாசுக்காக தவிர்த்து விடுகின்றனர்.

இன்னொரு புறம் அண்ணாமலை ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம். பாஜக தனித்து தான் போட்டியிட வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.

இப்போது அண்ணாமலைக்கு பூஸ்டர் கொடுத்தது போல் ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி. அண்ணாமலை அரசியல் பாணி தான் தமிழகத்துக்கு சரியானது என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அண்ணாமலை மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். கூட்டணி பற்றி அவர் சொல்லும் கருத்துக்கள் நேர்த்தியானவை. இதுபோன்ற கருத்துகளை சொன்னால் தான் பாஜக பேச்சை அதிமுக மதிக்கும். பாஜ ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது. நாட்டில் சர்வ வல்லமையுடன் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

சிடி ரவி சொல்வதை பார்த்தால், அண்ணாமலையின் தடாலடி பேச்சு லோக்சபா தேர்தலுக்கான வியூகம் போல் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறவே இப்படி செயல்படுகிறார்கள் என அரசியல் நிபுணர்கள் சிலர் கூறினர்.

No comments

Powered by Blogger.