ஷாக்கிங்! ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் மாயம்: 10 பேர் கதி என்ன? தமிழர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்!
புவனேஷ்வர், ஜூன் 4–
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 10 தமிழர்களை காணவில்லை என்று அரசு கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
கோர ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துவிட்டது. 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிமாக உள்ளது.
சாலிமர்–சென்னை நோக்கி வந்த ரயிலில் ஏராளமான தமிழர்கள் பயணித்தனர். முதலில் அவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்பதற்காக தமிழக குழு ஒடிசா விரைந்தது.
10 பேர் மாயம்
காயம் இன்றி மீட்கப்பட்ட 131 பேரை சிறப்பு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தது. காயம் பட்டவர்களுக்கு ஒடிசாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழக மருத்துவ குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் ரயிலில் பயணித்த 10 தமிழர்களை காணவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிக்கெட் புக் செய்தவர்களில் 10 பேர் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அரசு நடவடிக்கை
அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இந்த பணி எல்லாம் முடிந்தால் தான் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
இது குறித்து பேட்டி அளித்த போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ரயிலில் பயணித்த தமிழர்கள் 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
#Odisha #OdishtAccident #OdishaTrainAccident #BalasoreTrainAccident #BalasoreAccident #TrainTragedy #OdishaTrainTragedy #ஒடிசா #ஒடிசாரயில்விபத்து #பாலசூர்ரயில்விபத்து #ஒடிசாவிபத்து
No comments