இந்தியாவுக்காக உருகிய அமெரிக்க அதிபர்! ஒடிசா ரயில் விபத்தால் இதயம் நொறுங்கி விட்டது... ஜோ பைடன் சொன்னது என்ன?
புவனேஷ்வர், ஜூன் 4–
ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இந்தியாவில் நடந்த கோர ரயில் விபத்தால் என் இதயமே நொறுங்கிவிட்டது’ என்றார்.
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துவிட்டது.
1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிமாக உள்ளது.
அதிபர் இரங்கல்
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்துக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். முதல் ஆளாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் கூறினார்.
ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா என பல தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இதயம் நொறுங்கியது
ஒடிசா ரயில் விபத்து செய்தியை கேள்விப்பட்டதும் என் இதயம் நொறுங்கி விட்டது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு நானும் என் மனைவி ஜிங் பைடனும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்போம். இந்தியர்களின் துயரத்தில் அமெரிக்க மக்களும் பங்கெடுப்பதாக ஜோ பைடன் சொன்னார்.
#JoeBiden #Heartbroken #TrainCrash #IndiatrainAccident #Odisha #OdishtAccident #OdishaTrainAccident #BalasoreTrainAccident #BalasoreAccident #TrainTragedy #OdishaTrainTragedy #ஒடிசா #ஒடிசாரயில்விபத்து #பாலசோர்ரயில்விபத்து #ஒடிசாவிபத்து
No comments