Header Ads

Header ADS

கோகுல்ராஜ் கொலை வழக்கு... யுவராஜ் சாகும் வரை சிறையில் இருக்கணும்... ஆணவ கொலை வழக்கில் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு... பின்னணி என்ன?

சென்னை, ஜூன் 2–

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிக்கிய யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. யுவராஜ் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்.

கோகுல்ராஜ் கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். 2015ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் கிடந்தது.

கொலை வழக்கை மதுரை சிறப்பு கோர்ட் விசாரித்தது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண், குமார், சதீஷ்குமார், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு உட்பட 10 பேருக்கு சிறை தண்டனை விதித்தது.

மேல்முறையீட்டு வழக்கு

கோகுல்ராஜ், அவரது கார் டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை. 6 பேருக்கு ஆயுள் தண்டனை. 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மார்ச் மாதம் 8 ம் தேதி வந்தது.


தண்டனை பெற்றவர்கள் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். தண்டனையை ரத்து செய்யும்படி வலியுறுத்தினர்.

பரபரப்பு தீர்ப்பு

இந்த வழக்கில் இன்று கோர்ட் தீர்ப்பு கூறியது. ‘கோகுல்ராஜ் கொலையில் 10 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. மதுரை கோர்ட் அளித்த தீர்ப்பில் தவறு இல்லை’ என்று அறிவித்தது.


அதே நேரம் யுவராஜ் மட்டும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவித்தால் போதும் என்றது. அவரது கார் டிரைவர் அருண் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2 பேரின் ஆயுள் 5 ஆண்டாக குறைந்தது.

No comments

Powered by Blogger.